முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

நடிகர் கமலஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13 லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற உழைப்போம் எனவும் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Halley karthi

மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வானிலை மையம்!

Leave a Reply