பழம்பெரும் நடிகரின் பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் இருந்த முதலைக்குட்டியால் பரபரப்பு!

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த முதலைக்குட்டியை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.   தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தில் வசித்து வருபவர் மறைந்த பழம்பெரும் நடிகரான பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல். இவர் இன்று காலை வீட்டின் நீச்சல் குளத்தை…

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த முதலைக்குட்டியை வனத்துறையினர் பிடித்து சென்றனர். 
 தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தில் வசித்து வருபவர் மறைந்த
பழம்பெரும் நடிகரான பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல். இவர் இன்று காலை வீட்டின் நீச்சல் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில்  ஈடுபட்டிருந்தார், அப்போது ஒன்றரை அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதை கண்டார்.
நீச்சல் குளத்தில் இருந்த நீரை முழுவதும் இறைத்து பார்த்த போது அதில்
முதலைக்குட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து நீரை முழுமையாக இறைத்து முதலையை பிடித்தார்.
பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் மூலம் அந்த முதலைகுட்டியை உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாக கொண்டு சென்றனர். அதனுடன் ஒரு ஆமைகுட்டியும் பிடிபட்டது. அதனையும் பிடித்து சென்றனர்.
நெடுங்குன்றம் பகுதியில் முதலைகள் அவ்வப்போது பிடிபடுவது வாடிக்கையாகி
வருவதால் வனத்துறையினர் நீர் நிலைகளில் இருக்கும் முதலைகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.