பிரபல தயாரிப்பாளரிடமிருந்து பாலியல் தொந்தரவு: அனு இமானுவேல் பரபரப்பு தகவல்..!

நடிகை அனு இமானுவேல் சமீபத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், அதனை அவர் தனது குடும்பத்தினர் உதவியோடு எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான அனு…

நடிகை அனு இமானுவேல் சமீபத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், அதனை அவர் தனது குடும்பத்தினர் உதவியோடு எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான அனு இமானுவேல், மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, தமிழில் 2017-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ஒரு விஷாலுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அனு இமானுவேல் பேட்டி ஒன்றில்,

“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் சில பெரிய மனிதர்கள் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தனர். அப்படி, சமீபத்தில் ஒரு பிரபல தயாரிப்பாளரும் எனக்கு தொல்லை கொடுத்தார். ஆனால், நான் இதற்கெல்லாம் பயப்படாமல் என் குடும்பத்தினர் உதவியோடு எதிர்கொண்டேன்.இது போன்ற நேரத்தில், தனியாக பிரச்னைகளை சமாளிப்பதை விட, குடும்பத்தினருடன் சேர்ந்து எதிர்கொள்வது நல்லது. இது போன்ற நேரத்தில் நம் குடும்பத்தினரால் மட்டும்தான் நமக்கு உதவ முடியும். மேலும், பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது, இதுபோன்ற மோசமான நபர்கள் தான். அவர்களைப் பார்த்து பெண்கள் பயப்படாமல் துணிந்து முன்னேற வேண்டும். இந்த மாதிரியான பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் துணிச்சலாக முன்னேறிச் செல்ல வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.