உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் இன்று காலை சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு நாள் தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும் என்றும், வரும் 13ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








