முக்கியச் செய்திகள்

லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?

முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது.

திருச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக உள்ள துணை ஆட்சியர் சரவணக்குமார் லஞ்சமாக பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை செல்லும்போது விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆதி திராவிட நலத்துறையில் காலியாக உள்ள 12 சமையலர் பணி இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்ய 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றதும், அதனை சென்னை எழிலகத்திலுள்ள ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரக செயற்பொறியாளர் கலைமோகனிடம் கொடுக்கச் சென்றதும் தெரிய வந்தது.

இதற்கு உடந்தையாக திருச்சி அம்பேத்கர் விடுதி காப்பாளர் செந்தில் என்பவர் இருந்ததும் தெரிந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கலைமோகனை சேர்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணகுமார், செந்தில் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியாக முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட கலைமோகனையே ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையலர் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களிடம் கலைமோகன் விசாரணையையும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

48 மணி நேரத்திற்குள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உத்தரவு

Jeba Arul Robinson

ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

18% லிருத்து 28% ஆக உயரும் ஜி.எஸ்.டி

Arivazhagan CM