கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, புலி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மார்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி, மார்க் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியானது.







