26 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று முடிவடைகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கும் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 40,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கி றது. இதனால், முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வெளியாட்கள் இன்று மாலை 5 மணிக்குள்ளாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy