முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கு கிறது.

தீபாவளி, நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறையாகவே இருக்கும். பிறகு சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர்ந்து விடு முறை உள்ளதால், ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதற்காகவும் பலர் காத்திருக்கின் றனர்.

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக் கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக் கான முன் பதிவு இன்று தொடங்குகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமான மக்கள் பயணம் செய்வர் என்பதால், கடந்த ஆண்டைப் போல 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்து கள் இயக்க வாய்ப்புள்ளது. எனினும், சிறப்பு பேருந்துகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Saravana Kumar

கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா

Gayathri Venkatesan

டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; கொரோனா பரவலை தடுக்க கெஜ்ரிவால் அதிரடி!

Halley karthi