அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரொமோஷன் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத்…

நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரொமோஷன் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத் இயக்கிவருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் போனி கப்பூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷி மற்றும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் வி.எஃப்.எக்ஸ், பைக் ஸ்டண்ட் போன்றவை இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.

தற்போது முதன்முறையாக ‘வலிமை’ அப்டேட் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வலிமை’ படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.