டாப்-லீக் மென்பொருள் ஜாம்பவான் பாபி பாலச்சந்திரன் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.
நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.
நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார்.
டிமான்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித் மற்றும் அர்ச்சனா ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஆர்.சி.ராஜ்குமாரின் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து பாபி பாலச்சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Hold your breath!
The first look of #DemonteColony2 is coming out tomorrow at 5.01 PM.#VengeanceOfTheUnholy#DarknessWillRule#2023WillBeDark@BTGUniversal #BobbyBalachandran @AjayGnanamuthu @arulnithitamil @priya_Bshankar @SamCSmusic @dop_harish @ManojBeno @Kumaresh_editor… pic.twitter.com/W3eOhqEcsb
— BTG Universal (@BTGUniversal) August 2, 2023
தற்போது இந்த படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 05.01 மணிக்கு டிமான்டி காலனி 2 படத்தின் முதல்பார்வை வெளியாக உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







