நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் பைக் பயணத்தை தொடங்கியுள்ளார்.
நடிகர் அஜித்குமார், பைக் பயணத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தனது பைக் பயணத்தை தொடங்கினார். சண்டிகர், குலுமணாலி, கார்கில் ஸ்ரீநகர் ஜம்மு கேதார்நாத் – பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் அவர் பைக் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அஜித் மீண்டும் ஐரோப்பாவில் தனது இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால், விடாமுயற்சி என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





