விழுப்புரத்தில் ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரிடம் காலணியை எடுத்து வர சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் அருகே ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி ஜீப்பிலிருந்து இறங்கும் போது தனது காலில் காலணி இல்லாமல் இறங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் அழைத்தவுடன் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி தான் காலணி அணியவில்லை என்பதை உணர்ந்து தன் உதவியாளரிடம் காலணியை எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஜீப்புக்கு பின்புறம் தன்னை முழுமையாக காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டு கையை மட்டும் நீட்டி காலணியை தரையில் உதவியாளர் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் காலணியை அணிந்துகொண்டு ஆய்வை தொடர்ந்தார்.





