கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 122 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 63ல் இந்தியாவும், 51ல் நியூசிலாந்தும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.