‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில்…

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி – ஆம் ஆத்மி அறிவிப்பு!

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று (ஜன.09) மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தது. அதன்படி, திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1744683040302158263?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1744683040302158263%7Ctwgr%5E6a0d68792ca54bbaceb36f52a30cc7a4c337706f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Flal-salaam-release-date-announcement-1089267

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.