குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழு!

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் மே. 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் என்ற படத்தை தானே…

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் மே. 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பா.பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் ஒரு இயக்குனராக ராயன் படத்தின் மூலம் களமிறங்கி இருக்கின்றார். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

https://twitter.com/KuberaTheMovie/status/1784931260454064524

இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். வாத்தி என்ற திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் மே. 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.