திரைப்படத்துறையில் ஒரே தேசம், ஒரே வரி வேண்டும்: டி.ராஜேந்தர்

திரைப்படத்துறையில் ஒரே தேசம், ஒரே வரி வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார். VPF கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும் எனவும், LBT வரியை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி…

திரைப்படத்துறையில் ஒரே தேசம், ஒரே வரி வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

VPF கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும் எனவும், LBT வரியை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க கௌரவ ஆலோசகர் டி.ராஜேந்தர், தலைவர் உஷா ராஜேந்தர் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் பேசிய டி.ராஜேந்தர், திரைப்படத்துறையில் ஒரே தேசம் ஒரே வரி வேண்டும் என தெரிவித்தார்.

தாய் சங்கத்தில் இருந்து தங்களை நீக்கினாலும், சிறு தயாரிப்பாளர்களுக்காக போராடுவேன் என்று கூறிய அவர், மத்திய அரசு GST வரி விதிக்கும் நிலையில் மாநில அரசு LBT வரி விதிப்பதாகவும், இரண்டு வரி போட்டால் எப்படி வருவாய் ஈட்ட முடியும் என்றும் வினவினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.