வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு – இன்று வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகையை சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்த போராட்டம் அறிவித்தது. இதனால் 5 நாட்கள் வரை தொடர்ந்து வங்கி சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வங்கி சேவை பாதிகாமல் இருக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் செப்.27 (நேற்று) ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம்போல் செயல்பட்டன.

இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வங்கிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.