புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி, கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்து விட்டதால், இரவு 12.30 மணிக்குப் பிறகு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப்பதிவு செய்த நீதிபதிகள், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக் கடைகளிலும், மக்கள் கூடுவதைத் தடுக்க, டிசம்பர் 31 தேதி இரவு 10மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, 3 நேரத்திற்கு மட்டும் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றும், பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.