4K தரத்தில் ரீரிலீஸுக்கு தயாராகும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்!

இயக்குநர் தரணியின் படைப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்…

இயக்குநர் தரணியின் படைப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ‘லியோ’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமான ‘கில்லி’  ரீ ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!

சினிமா வாழ்வில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக ‘கில்லி’ அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘கில்லி’ திரைப்படம், ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்தது.

இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், வருகிற ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.