#DemonteColony 2 : வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு அருள்நிதி அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவான டிமான்டி காலனி திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி…

டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அருள்நிதி அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவான டிமான்டி காலனி திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. வழக்கமான பேய் படத்திலிருந்து வித்தியாசமான ஒரு திரைக்கதை மூலம் உருவான திரைப்படம் அதன் காரணமாகவே நன்றாக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது.  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

இதையும் படியுங்கள் : #THEGOAT ட்ரெய்லர் : 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரல்!

சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் இந்த வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.