தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் துணி மற்றும் நகைகளை வாங்குவதற்காகவும் சென்னை திநகர், வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகளவில் குவிந்தனர். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து வரும் மோகம் அதிகரித்து காணப்பட்டாலும் நேரடியாக கடைகளுக்கு வந்து துணிகளை வாங்குவதில் மக்கள் தற்போது ஆர்வம் காட்டுவதை இந்த அலைமோதும் கூட்டம் காண்பிக்கின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி வண்ணாரப்பேட்டை, திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. இதையடுத்து கடைவீதிகளில் முன்பு போலீசர்ர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், செயின் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறை உடை இல்லாமல் பொதுமக்களுடன் பொது மக்களாக கலந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஈரோட்டில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, காவிரி சாலையில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினருக்குமான ஜவுளி விற்பனை கடைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு குவிந்து தங்களது குடும்பத்தாருக்கு தேவையான புத்தாடைகளை வாங்கி சென்றனர்.
பொதுமக்களின் வருகை காரணமாக ஈரோடு நகர காவல் துறையின் சார்பில் ஐந்துக்கும்
மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள்
பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.