சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற வீர சிம்ஹ ரெட்டி படத்தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனி – ரவிதேஜா கூட்டணி 4-வது முறையாக மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளதால் அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் வீர சிம்ஹ ரெட்டி எர்னா படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி மீண்டும் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடன் கைகோர்த்து படம் எடுக்க உள்ளார். இந்தப் படம் இயக்குனர் கோபிசந்த் மலினேனி, ரவிதேஜாவுடன் இணைந்து எடுக்கும் நான்காவது படம் ஆகும்.
தற்போது உருவாக உள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக இருக்கிறது. ரவிதேஜாவின் கடைசியாக வெளிவந்த தமாகா, வால்டர் வீரய்யா படங்கள் நல்ல ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பினை பெற்றது. ஆனால் ராவணசுரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து ‘ஈகிள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாட்ரிக் மாஸ் வெற்றிக் கூட்டணி திரும்பவும் இணைந்ததில் ரவி தேஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்பாக 2008, 2013, 2021 முறையே டான் சீனு, பலுபு, க்ராக் ஆகிய வெற்றிப் படங்களில் இந்த ஜோடி இணைந்து பணியாற்றியுள்ளது .
- பி.ஜேம்ஸ் லிசா








