மீண்டும் சந்தித்த காவலர் குடியிருப்புவாசிகள்!

மதுரை காவலர் குடியிருப்பில் வசித்த காவலர்கள் , மீண்டும் குடும்பத்துடன் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது ஆயுதப்படை மைதானம். இதனை சுற்றியுள்ள காவலர் குடியிருப்பில் தான் அதிகப்படியான காவலர்கள் குடும்பத்தினருடன்…

மதுரை காவலர் குடியிருப்பில் வசித்த காவலர்கள் , மீண்டும் குடும்பத்துடன்
சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது ஆயுதப்படை மைதானம்.
இதனை சுற்றியுள்ள காவலர் குடியிருப்பில் தான் அதிகப்படியான காவலர்கள்
குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அதே போல் ராம்நாடு மாவட்ட
காவலருக்கான குடியிருப்பு பகுதியும் இங்கு தான் இருந்தது. இதனை,
ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு – மேற்கு காவலர் பகுதி என இரண்டு பகுதியாக
பிரிக்கப்பட்டிருந்தது.

மேலும், இங்கு வசித்த காவலர் குடும்பத்தினர் பல்வேறு இடங்களுக்கு மாறினாலும்,
மீண்டும் ஒன்றாக சந்தித்து அன்பை பகிரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சந்திப்பு
விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு , சிறப்பாக நடைபெற்றது.

தாங்கள் பகுதியில் வசித்த போது ஏற்பட்ட பழைய நினைவுகளை” பேசிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும், இந்த சந்திப்பு 2-வது முறையாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.