வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி!

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்காக கொடியேற்றும் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை…

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்காக கொடியேற்றும் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு வருகிற மே 19-ம் தேதி துவங்க உள்ளது. அதற்காக இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் இதில் கண்ணீஸ்வரமுடையார் முல்லைப் பெரியாற்றிலிருந்து கோயிலுக்கு முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த கம்பத்திற்கு முல்லை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவது ஐதீகம். அத்திமரத்தாலான இந்த கம்பத்தையே அம்மன், சிவனாக பூஜிக்கிறார்கள். மேலும் கம்பகத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அதன் பின் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டிக்கொண்டனர்.

கொடியேற்றம் முதல் 21 நாட்கள் பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். இக்கோயிலின் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்து நேரத்திக்கடன் செலுத்துவார்கள்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.