‘தி ஃபேமிலி மேன்’ தொடரை தடை செய்யவேண்டும்: வைகோ!

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தை தடை செய்ய வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ‘தி பேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம்…

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தை தடை செய்ய வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

‘தி பேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் அண்மையில் வெளியானது. “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இதன் முன்னோட்டம், வெளியான போதே சர்ச்சையை சந்தித்தது. இப்படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிகை சமந்தா நடித்துள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தமிழர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு படுத்தி சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இந்த தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.