மீனவர்களுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“ கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக்…

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“ கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவ குடும்ங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரின் உத்தரவின்படி 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக தலா ரூ.5000 வழங்கிட ரூ. 86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.