அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின்…

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”
அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில்
ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி பெயரில் கட்டி வரும் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் 8 அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் 3-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வரும் நிலையில் .கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.