தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி; மெலடி குயின் ’ஸ்ரேயா கோஷல்’ பிறந்தநாள் ஸ்பெஷல்

தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி மெலடி குயின் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாளான இன்று அவரை குறித்த சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் பார்ப்போம். 1984 ஆம் ஆண்டு மார்ச் 12ம்…

தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி மெலடி குயின் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாளான இன்று அவரை குறித்த சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் பார்ப்போம்.

1984 ஆம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, மேற்கு வங்கம் மாநிலம், பெர்ஹாம்பூர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரேயா கோஷல். 4 வயது முதலே அவர் பாடுவதற்கான பயிற்சி அளிக்க தொடங்கினார் அவரது தாய் ஷர்மிஸ்தா. அவரது தந்தை பிஷ்வாஜித் கோஷல் ஒரு மின் பொறியியலாளர். ராஜஸ்தானின் கோட்டா அருகே ராவத்பட்டாவில் இருந்த இந்திய அணுசக்தி கழகத்தில் அவர் பணிபுரிந்ததார். இதனால் எட்டாம் வகுப்பு வரை ராவத்பட்டாவில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் படித்தார் கோஷல். படிப்புடன் சேர்த்து இசையிலும் ஜொலிக்க தொடங்கினார்.

2000ஆம் ஆண்டில் அவரது பதினாறு வயதில், ஜீ தொலைக்காட்சியில் நடைபெற்றற இசை ரியாலிட்டி ஷோவான சா ரே கா மா வில் பங்கேற்று வெற்றிபெற்றார்… இந்த வெற்றிதான் அவருக்கான் சினிமா பாடல் வாய்ப்புகளை தேடிதந்தது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று ஸ்ரேயா கோஷல் தனது குழந்தை பருவ நண்பர் ஷிலாதித்யா முகோபாத்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காதலித்து வந்தனர்.ஸ்ரேயா கோஷலின் ஆல் டைம் ஃபேவரட் சிங்கர் லதா ஜி எனவும் அவர் தனது உத்வேகம் எனவும் பல முறை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சா ரே கா மா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரேயா. பன்சாலியின் தாயார் பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார், பின் ஸ்ரேயா கோஷலின் அடுத்த செயல்திறனை காண சஞ்சய் லீலா பன்சாலியை அழைத்தார், அப்போது அவரது குரலை கேட்ட இயக்குநர் பன்சாலி, தனது அடுத்த படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்தார். 2002 ஆம் ஆண்டு ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தேவ்தாஸ் படம் மூலம் திரை உலகுக்கு அவரை அறிமுகப்படுத்தினார். பன்சாலியின் கூற்றுப்படி, தேவதாஸ் திரைப்படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்குத் தேவையான அப்பாவித்தனத்தை கோஷலின் குரல் கொண்டிருந்தது என அவர் நம்பினார். அவர் பாடிய முதல் பாடலுக்கு தேசிய விருது தேடி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை இசையுலகின் நிகரில்லாத ராணியாக வலம் வருகிறார் ஸ்ரேயா கோஷல்.

பல மொழித் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களை நான்கு முறை தேசிய விருதும், ஏழு முறை ஃபிலிம்பேர் விருதும், பத்து முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆல்பங்களையும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர், இதன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அவருக்கென தனி ரசிகர்கள் ஆர்மி உலகெங்கும் உருவாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலில் ஃபோர்ப்ஸ் பத்திரைகையில் ஐந்து முறை இடம்பெற்றுள்ளார்.

2010ம் ஆண்டு அமெரிக்க மாநிலமான ஓஹியோ(ohio)வில் அதன் அப்போதைய ஆளுநர் டெட் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவர் ஜூன் 26ம் தேதியை “ஸ்ரேயா கோஷல் தினம்” என்று அறிவித்து ஸ்ரேயா அவரை கவுரவித்தார். 2017ஆம் ஆண்டில் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிருவப்பட்ட முதல் இந்திய பாடகி ஆனார் ஸ்ரேயா கோஷல். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்ரேயா இசைதுறையில் இதுவரை நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.
பிறமனிதர்களை மகிழ்விக்க கூடிய திறன் உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷல் இந்த பூமிக்கு கிடைத்த வரம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.