பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. அதோடு பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.







