”தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது”- கிருஷ்ணசாமி பேட்டி….!

திமுக அரசானது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. 2026 தேர்தலில் அனைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

புதிய தமிழகம் கட்சி 2026 தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஆட்சி மாற்றத்தின் ஒரு சக்தியாக இருக்கும். ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அதனால் புதிதாக வரும் சக்திகளையும் நாங்கள் புறம் தள்ள முடியாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரும் கட்சியிலேயே நாங்கள் கூட்டணி வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.