ரஜினிக்கும், கமலுக்கும் உள்ள வித்தியாசம் | #LokeshKanagaraj சொன்ன சுவாரஸ்ய பதில்!

நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில்…

நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து, விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கினார். இந்த இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து, ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார்.

இதையும் படியுங்கள் : நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? – இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!

இது குறித்து அவர் பேசியதாவது :

“கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவருடனும் பணிபுரிவதை பெருமையாக கருதுகிறேன்.
ரஜினி சார் ஒரு இயக்குநரின் நடிகர். திரையிலும், வெளியிலும் அவருடைய மேஜிக் பெரியது. நடிகர் என்பதைத் தாண்டி தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று கமல் கமல் சாரை கூறுவார். ஒரு காட்சியை நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் விளக்குவதற்கு வித்தியாசம் இருக்கிறது. நடிப்பு என்று வந்துவிட்டால், அதை எப்படி வார்த்தையில் சொல்வது என தெரியவில்லை. இருவருமே கேமராவுக்கு முன்பு நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்இருவருமே திரைத்துறை மேதைகள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.