” #VineshPhogat -க்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு தான் ” – விமர்சித்த பாஜக தலைவர்…

ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள வினேஷ் போகத்துக்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு தான் என பாஜக மூத்த தலைவர் பிரிஜ் பூஷன் சிங் விமர்சித்துள்ளார். மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த…

" The destination for #VineshPhogat is destruction " - Brij Bhushan Charan Singh !

ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள வினேஷ் போகத்துக்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு தான் என பாஜக மூத்த தலைவர் பிரிஜ் பூஷன் சிங் விமர்சித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த சூழலில் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். நேற்று (அக்.8ம் தேதி) தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் 65,080 வாக்குகளை அவர் பெற்றார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,105 வாக்குகளில் தோல்வி அடையச் செய்தார்.

இதையும் படியுங்கள் : #INDvsBAN | இந்திய அணியின் சவாலை சமாளிக்குமா வங்கதேச அணி? இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி!

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“என் பெயரைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றால் நான் பெரிய மனிதன் என்று அர்த்தம். எனது பெயரின் சக்தி அவர் வெற்றி பெற உதவியது. வினேஷ் போகத்துக்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு நிச்சயம். தேர்தலில் அவருக்கு வெற்றி, காங்கிரஸுக்கு அழிவு. இந்த மல்யுத்த வீரர்கள் நாயகர்கள் அல்ல வில்லன்கள். நாட்டு மக்கள் காங்கிரஸை தேர்தலில் புறக்கணித்துள்ளனர். இதனை அவர்கள் இப்போதாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.