முக்கியச் செய்திகள் இந்தியா

பிரபல இசைக்கலைஞர் மறைவு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

புகழ்பெற்ற சாந்தூர் இசைக்கலைஞரான பண்டிட் ஷிவ்குமார்  மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் புகழ்பெற்ற சாந்தூர் இசைக்கலைஞர் சிவ்குமார் சர்மா. இவர் மாரடைப்பு காரணமாக மும்பையில் இன்று காலமானார்.வர் 1938 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தார். 1967ம் ஆண்டு புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியா மற்றம் கிதார் கலைஞர் பிரிஜ் பூசண் கப்ரா ஆகியோருடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாந்தூர் பாராம்பரிய இசை மிகவும் பிரபலமானது. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ ( 1991ல்) மற்றும் பத்ம விபூஷன் (2001ல்) விருதுகளை பெற்றவர்.

இவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரிய இசைக்கருவியான சந்தூரை பிரபலப்படுத்தினார். ஆனால், அவரது சந்தூர் இப்போது அமைதியாகி விட்டது, சிவ் குமார் சர்மாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக றிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,பண்டிட் சிவ்குமார் சர்மா மறைவால் நமது இசையின் கலாச்சார உலகம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உலக அளவில் சாந்தூரை பிரபலப்படுத்தினார். வரும் தலைமுறையினரையும் அவரது இசை கவரும் வகையில் அமைந்தது. அவருடனான எனது கலந்துரையாடல்களை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னை வந்தது 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!

Halley Karthik

பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேர் கைது

Halley Karthik

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!