தளபதி விஜயின் 66வது படத்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி தமிழில் இயக்குகிறார். பீஸ்ட் படத்திற்கு கலவையான.. இல்லை இல்லை கொஞ்சம் மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் தான் யானை இல்லை குதிரை என நிரூபிக்க அடுத்த படத்திற்கான வேலையில் பரபரப்பாக இறங்கிவிட்டார் விஜய்.
இப்படத்திற்கு விஜயின் வெறித்தனமான ரசிகரான தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்திற்கான பூஜை நிகழ்ச்சியில் , விஜயின் முரட்டுத்தனமான ரசிகரான ராஷ்மிகா மந்தனா அவருக்கு சுற்றி போடுவது போல் அன்பை அள்ளி தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படுங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலனாது. மேலும், இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தில் இணையும் மற்ற நட்சத்திரங்களின் பட்டியல்களையும் வெளியிட்டுள்ளது தளபதி66-ஐ தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, சங்கீதா, தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர்கள் இதுவரை வண்டியில் ஏறியுள்ளனர். கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு தளபதி 66 திரைக்கு வந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அன்லிமிடெட் விருந்து வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித், விஜய் படங்கள் என்றாலே படத்தின் வசூலை வைத்து தான் இருதரப்பிலும் சோசியல் மீடியாவில் மோதிக்கொள்வார்கள். அந்த வகையில் வசூல் ரீதியாக விஜய் படங்களே முந்திநிற்கும். இந்நிலையில் தெலுங்கு இயக்குநரையும், நடிகர்களையும் உள்ளடக்கி உருவாகும் இந்த படத்திற்கு தமிழ்நாடு அளவில் தெலுங்கு சினிமா உலகிலும் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. எனவே இப்படத்தின் மூலம் வசூலில் புதிய உச்சம் தொடுவார் விஜய் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Advertisement: