இமாச்சல பிரதேச மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணாநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன் கோவில் தரைமட்டமானது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் கோயில் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சம்மர் ஹில் பகுதியில், பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மண்டி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ராம் ஜூலா பாலத்தின் மீது தாங்கும் கம்பி உடைந்தது.இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரிஷிகேஷில் புகழ்பெற்ற ராம் ஜூலா பாலமும் உடைந்தது.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மைதானா மற்றும் புர்சாதி இடையே உள்ள சாலை வியாழக்கிழமை மாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஆகஸ்ட் 21 முதல் 23 வரை உத்தர காண்டில் லேசானது முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






