நடிகர் தனுஷின் ’D50’ திரைப்படத்தின் சூட்டிங் அக்டோபரில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் சூட்டிங் அக்டோபரில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை நிறைவு செய்தவுடன் இந்த ஆண்டின் இறுதியிலேயே அடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணையவுள்ளார் தனுஷ்.







