ரூ.1.70 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

ரூ.1.70 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில்…

ரூ.1.70 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞசய் தத், அர்ஜூன், மிஸ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

2017-ல் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருகிறார். விக்ரம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள லெக்ஸாஸ் கார் ஒன்றை லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் பரிசளித்தார்.

இந்நிலையில் ரூ.1.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ(BMW) 7 வரிசையிலான கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார். லோகேஷ் அடுத்ததாக ரஜினி – 171 படத்தையும் பின் ‘கைதி – 2 படத்தையும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.