மதுரையில் காதல் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசிக்கும் சதீஷ்குமார் கொத்தனாராக பணிபுரிந்துவருகிறார். இவர் சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் மதுரையில் தனையாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மனைவியை சதீஷ்குமார் அவதூறாக பேசியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கணவன் சதீஷ்குமார் கைக்கு கிடைத்ததை கொண்டு மனைவி சித்ராதேவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘சென்னை – அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா’
இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், படுகாயங்களுடன் இருந்த சித்ராதேவி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் மனைவியை கொலை செய்த சதிஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








