அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் கணேசன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் தேர்விற்கான நேர்காணல் குழுவில் கணேசன் இடம் பெற்றிருந்தார். அப்போது விதிகளுக்குப் புறம்பாக தகுதியற்ற நபர்களைத் தேர்வு செய்ததாக இவர் மீதான புகார் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது.
இதனால், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







