கோவை மாவட்டம், அன்னூர் அருகே, சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை, வேகமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் நித்யா, பாதுகாப்பு பணிக்காக, மேட்டுப்பாளையத்தில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பொகளூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த தம்பதி, நாய் குறுக்கே ஓடியதால், நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில், மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வாகனத்தை நிறுத்திய காவல் ஆய்வாளர் நித்யா, கீழே விழுந்த தம்பதியை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளித்து பின்னர், இருவரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.







