இளம் பெண் காவல் அதிகாரி கொடூரக் கொலை: சரணடைந்த காதலர்

டெல்லியில் இளம் காவல்துறை பெண் அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் ரபியா ஷைஃபி…

டெல்லியில் இளம் காவல்துறை பெண் அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் ரபியா ஷைஃபி (21). இவர் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பணிக்கு சென்ற ஷைஃபி, வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பெற்றோர், பல இடங்களில் தேடினர். அவர் கிடைக்கவில்லை என்பதால் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் காணாமல் போன ஷைஃபி, சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது டெல்லி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு, டெல்லி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள னர். நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுத்துள்ளன. சமூக வலை தளங்களில் #JusticeForRabiya என ஹேஷ்டேக்கில் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரு கின்றனர். இதையடுத்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக நிஜாமுதீன் என்பவர் போலீசில் சரணடைந்துள் ளார். ரபியாவும் தானும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் நடத்தையில் சந்தேகமடைந்து கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ரபியாவை, சுராஜ்குந்த் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிஜாமுதீன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் ஆத்திரத்தில் அவரைக் குத்திக் கொன்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ரபியாவின் பெற்றோர் இதை மறுத்துள்ளனர். நிஜாமுதீன், ரபியாவின் நண்பர் என்றும் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள் ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.