முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

நூற்றாண்டு காணும் சீன கம்யூனிஸ்ட் கட்சி; வளர்ச்சியும், சிக்கல்களும்…


கார்த்தி.ரா

பொருளாதாரத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் முன்னேறிய சீனாவை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐ.எம்.எஃப்க்கு மாற்றாக உருவாகி வரும் இன்றைய சீனா, 1900ல் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆக்கிரமிப்பில்தான் இருந்தது. சீனாவை பாரம்பரியமாக ஆண்டு வந்த சிங், சியா வம்ச அரசர்கள் ஆட்சியில் வறுமையும், போதைப் பொருட்களும் நிறைந்து வழிந்தன என்றால், அது மிகையல்ல.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படியான சூழலில்தான், மாவோ எனும் தலைவர் உருவானார். 1893ல் பிறந்த மாவோ, சென்-துஹ்ஷியூவின் (Chen Duxiu) மற்றும் லி டாஷாவோவின் (Li Dazhao) தலைமையில் ஜூலை 1921இல் ஸ்தாபக சீன கம்யூனிஸ்ட் கட்சியை கச்சிதமாக வழிநடத்தினார். சுமார் 10 ஆயிரம் மக்களை திரட்டி பெரும் நடைபயணத்தை மேற்கொண்டார். செல்லும் இடங்களிலெல்லாம் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளை கைப்பற்றிக்கொண்டே சென்றார். இறுதியில், புரட்சி வெற்றியடைந்தது. 1949ல் மக்கள் சீன குடியரசு அமைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மாவோ அறிவித்தார்.

அப்போது தொடங்கி சீனா பெரும் இழப்புகள், பாதிப்புகள், பிற நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து கடும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையை கொண்டிருந்த இந்நாட்டில் வறுமை தாண்டவமாடியது. 1990ம் ஆண்டு சீனாவில் வறுமை கோட்டுக்கு கீழ் 75 கோடி பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கையானது அந்நாட்டு மக்கள் தொகையில் 3ல் 2 பங்காகும். கடந்த 100 ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் காரணமாக 2012ஆம் ஆண்டு இந்த வறுமைக்கோடு எண்ணிக்கை 9 கோடியாக குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அது 72 லட்சமாக குறைந்துள்ளது என்கிறது உலக வங்கியின் தரவுகள். இது சீன மக்கள் தொகையில் 0.5 சதவிகிதமாகும்

தற்போது உலக அளவில் அந்நிய செலாவணி கையிருப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. புதிய பொருளாதார கொள்கைகள் மூலம் அந்நிய முதலீடுகள் சீனாவில் குவிந்துள்ளன. சீனா 2028-ம் ஆண்டிற்குள் அமெரிக்காவை பின்னுக்குதள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனக் கணித்துள்ளது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்.

சீனப் பொருளாதாரத்தின் மாற்றத்தை, கடந்த 2005ஆம் ஆண்டு அலுவல் முறையாக வெளியிட்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 2010களின் துவக்கத்தில் சீனா 10 டிரில்லியன் டாலரை எட்டிய முதல் ஆசிய நாடானது. இதன் மூலம் அமெரிக்காவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சமநிலையை எட்டியது. 2015இல் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை துவக்கியது.

இவை யாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி என்பது, 1921ம் ஆண்டு துவங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சிதான். சொற்ப எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 7 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது.

இந்த சூழலில், கட்சியின் நூற்றாண்டு விழாவில் “சீன நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் அந்நிய சக்திகளின் தலையை சீனப் பெருஞ்சுவசுக்குநூறாக்குவோம்” என அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்திருப்பது, சோஷலிச பாதையின் மீதான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்றால், உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில், சீன அதிபரின் இந்த பேச்சு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை எரிச்சலடைய செய்துள்ளதாக கூறுகின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜகவுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பது உறுதி: அண்ணாமலை

EZHILARASAN D

புதுச்சேரியில் புதிதாக 88 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

மும்பையில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு

Halley Karthik