முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

’செம த்ரில்லரா இருக்கும் போலிருக்கே..’ வெளியானது சிம்புவின் ’மஹா’ டிரைலர்

சிம்புவின் ’மஹா’ படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கும் படம், ’மஹா’. யு.ஆர். ஜமீல் இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு விமானியாக நடித்திருக்கிறார். மற்றும் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டது. இதனால் ஒடிடி-யில் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜமீல், உதவி இயக்குநரை வைத்து படத்தை முடிக்க தயாரிப்பாளர் திட்டமிடுவதாகவும் தனது சம்பளப் பாக்கியை வாங்கித் தர வேண்டும் என்றும் படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்குமான பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு கூறியிருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் டிரைலரை வெளியிட இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தப் படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். செம த்ரில்லராக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை சிம்பு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

15 ஆண்டுகள்… இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை சந்திக்குமா இந்தியா?

EZHILARASAN D

”பாபா” படம் மறுவெளியீடு எப்போது?- வெளியானது அறிவிப்பு

Web Editor

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

G SaravanaKumar