கோவை-பல்லடம் சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும்- முதலமைச்சர்

கோவை பல்லடம் சாலையை இணைக்கும் திட்ட சாலைக்கு அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அருட்செல்வர் டாக்டர். பத்மபூஷண் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா…

கோவை பல்லடம் சாலையை இணைக்கும் திட்ட சாலைக்கு அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அருட்செல்வர் டாக்டர். பத்மபூஷண் பொள்ளாச்சி
மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி,
கயல்விழி செல்வராஜ், முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கொங்கு நாடு அறக்கட்டளை தலைவர் அப்பாவு, சக்தி குழும தலைவர்
மாணிக்கம், பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் B.K.கிருஷ்ணராஜ் வாணவராயர்,
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் கயிலைப்புனிதர், சீர்வளர்சீர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலில், பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உருவபடத்திற்கு மலர் மரியாதை செலுத்திய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து விழா நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அறகட்டளை அறங்காவலர் சந்திர மோகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ஆதினத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சர் வழங்கினார்.இலக்கியத்திற்க்கானஅருட்செல்வர் விருது அவ்வை நடராஜனுக்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அவர் மகன் அருள் பெற்றுக்கொண்டார். தொழில்துறைக்காக வழங்கப்படும் அருட்செல்வர் விருது ஏ.வி.எம் நடராஜனுக்கு அறிவிக்கப்பட்டது. ‘ காலிங்கராயன் விருது ‘ அமெரிக்கா தொழில்நுட்ப ஆலோசகர் விஞ்ஞானி நா. கணேசனுக்கும், ‘ கொங்குவேள் விருது ‘ ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் தமிழ் அகராதி பதிப்பாசிரியர் டாக்டர் வி. முருகனுக்கு வழங்கப்பட்டது. சி. சுப்பிரமணியன், தனசேகர், உள்ளிட்டோருக்கு வேளாண் துறையில் நவீன முறையை கொண்டுவந்ததற்கு விருது வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருந்து உங்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால், நாளை ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் கூட உள்ளது. அதற்கான பணிகள் இருப்பதால் விரைவாக செல்ல வேண்டி உள்ளது. அதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.பெரியார் என்றால் தந்தை பெரியார், அண்ணா என்றால் அறிஞர் அண்ணா, முத்தமிழ்
அறிஞர் என்றால் கலைஞர் என்பது போல் அருட்செல்வர் என்றால் பொள்ளாச்சி
மகாலிங்கம் தான். இவர் மறைந்த போது கலைஞருக்கு உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது. எனவே என்னை நேரில் சென்று அஞ்சலி செலுத்த சொன்னார். அப்போது அவர்களுக்கு இருந்த நட்பை பற்றி சொன்னார்.

அருட்செல்வர் என்பது பட்டபெயாரால் இல்லாமல் பண்பு பெயராக அமைந்தது உள்ளது.
திருக்குறளை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தது மட்டுமின்றி மற்ற மாநில மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தார். அருட்செல்வர் என்பதுடன் சேர்த்து அவரை தமிழ் செல்வர் என்று கூட அழைக்கலாம். இவரை போல் பலரும் உருவாக வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டின் தொழில் , அரசியல், கல்வி, பதிப்பு என அனைத்திலும் முத்திரையை
பதித்தவர்.

இந்த நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கோவை பல்லடம் சாலையை
இணைக்கும் திட்ட சாலைக்கு அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பெயர்
சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.