ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி இந்திய ராணுவம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், ராணுவத்தின் பெரும் வீரத்தையும் தியாகத்தையும் போர் வெற்றி தினத்தில் நினைவு கூர்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரின் இறுதியில் பாகிஸ்தான் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தன.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் என்ற பெயரில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்திய ராணுவத்தின் பெரும் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அடக்குமுறை சக்திகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள மோடி , குடியரசுத்தலைவர் டாக்காவில் நடைபெறும் வெற்றிதின கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பார்வையாளர் குறிப்பேட்டில், “1971 ஆம் ஆண்டு போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக தலைவணங்குகிறேன். ஈடு இணையற்ற வீரக் கதைகளை எழுதிய வீர வீரர்களை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.” என எழுதியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1471348954453266433
இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போர் இந்திய ராணுவத்தின் வரலாற்றில் பொன்னான அத்தியாயம் என கூறியுள்ளார். இந்நாளில் நம் ராணுவத்தினரின் தைரியத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்வோம் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.









