முக்கியச் செய்திகள் பக்தி

கோலாகலமாக தொடங்கிய சித்திரைத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இன்று காலை முதலே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுமார் 11 மணியளவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. மதுரை மீனாட்சி, சொக்கநாதன் தங்க வைர நகைகள் மற்றும் பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தனர்.

அண்மைச் செய்தி: ‘கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு’ – முதலமைச்சர் நம்பிக்கை’

மேலும், வரும் 14-ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை வரும் 16-ந்தேதி வரை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் பிரத்யேக நேரலையாக காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

பல்லாவரம் தேர்தல் பணிமனை திறந்து வைத்த துணை முதல்வர்!

Niruban Chakkaaravarthi

கோவிட் -19: நாடுமுழுவதும் 10,000 நிறுவனங்கள் மூடல்!

Jeba Arul Robinson

ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்

எல்.ரேணுகாதேவி