முக்கியச் செய்திகள் சினிமா

சீட்டை உடைத்த விஜய் ரசிகர்கள்; மீம்ஸ் போடும் தியேட்டர்!

பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது விஜய் ரசிகர்களால் தியேட்டரின் சீட்டுகள் உடைக்கப்பட்டபோதும் மனம் தளராமல் பீஸ்ட் festival-க்கு தயாராகும் ராம் சினிமாஸ்.

பீஸ்ட் படத்திற்கான ட்ரெய்லரை தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் விஜய் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகளாக வெளியிட்டனர். நெல்லை ராம் தியேட்டரில் கட்டணமின்றி வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர் காட்சிகளை காண நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் ஒன்று கூடினர்.வழக்கமாக கட்டணக் காட்சிகள் என்றால் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்படும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதில் பெரிதாக சிக்கல் இருப்பதில்லை. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் 3 நிமிட ட்ரெய்லரை தவறவிட்டுவிடக்கூடாது என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் ஒரே நேரத்தில் முந்தியடித்துக்கொண்டு உள்ளே சென்றதில் தியேட்டரின் முகப்பு கண்ணாடி சுக்குநூறாக உடைந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ட்ரெய்லரை பார்த்து முடித்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் தியேட்டரின் உள்ளே சென்று பார்த்த நிர்வாகத்தினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏறத்தாழ 500 பேருக்கான இருக்கைகள் கொண்ட தியேட்டரில் கிட்டத்தட்ட ஆயிரம் ரசிகர்கள் பீஸ்ட் mode-க்கு மாறி கொண்டாட்டத்துடன்
கண்டுகளித்ததால், நிறைய இருக்கைகள் உடைபட்டு போயிருந்தன. சல்லி சல்லியாக நொருக்கப்பட்ட இருக்கைகளை பார்த்து தியேட்டர் நிர்வாகம் மனம் நொந்துபோனதாக தகவல் வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி, “உங்களுக்காக கட்டணமில்லாம ஒரு ஸ்பெஷல் ஷோவ அரேஞ்ச்பண்ணதுக்கு உங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிட்டீங்க” போன்ற மீம்களும் பகிரப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இனிவரும் காலங்களில் தியேட்டரில் இதுபோன்ற டீசர், ட்ரெய்லர்கள் வெளியிடுவதை தியேட்டர் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தியேட்டர்
உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்திருந்தார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத திருநெல்வேலி ராம் சினிமாஸ் நிர்வாகம்’
இன்று ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், தங்கள் திரையரங்கில் விரைவில் பீஸ்ட் படத்திற்கான புக்கிங் தொடங்கப்படும் எனவும், விடுமுறை இல்லாத தினத்தில் வெளியிடப்படும் போதிலும் பீஸ்ட் திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் 100% தியேட்டர் ஆக்கிரமிப்புடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் சிந்தியதோடு
அதிலேயே நீந்திக்கொண்டு ராம் தியேட்டருக்கு செல்ல மகிழ்ச்சியுடன் ஆயத்தமாகத் தொடங்கினர். அந்த ட்வீட்டை விஜய் ரசிகர்கள் ஹார்ட்டினுடன் ஷேர் செய்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்கள் ராம் தியேட்டரை நக்கல் செய்யத்தொடங்கினர். ‘ நீங்க இப்படியே பன்னிட்டு இருந்தா ஃபேமிலி ஆடியன்ஸ் வராம தியேட்டரோட ரீச்சே போய்டும்’ என்று அரியவகை பாசத்துடன் ஒரு அஜித் ரசிகர் கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ராம் சினிமாஸ் ட்விட்டர் அட்மின், அஜித் ரசிகர் என்றும் பாராமல், ‘அதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற’ என்று வடிவேலுவின் மீம்-ஐ கமெண்ட் செய்து பதிலடி கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆக்‌ஷன் ப்ளாக்கிற்கு ரெடியான
அஜித் பேன்ஸ் ராம் சினிமாஸை பிலுபிலுவென பிடிக்கத்தொடங்கினர். Rest is history!

Advertisement:
SHARE

Related posts

விஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ezhilarasan

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்

Vandhana

வேதா நிலையம் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Niruban Chakkaaravarthi