முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர்

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால வித்யாலயா அரசுப் பள்ளியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புத்தகங்களை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் தொடர்பான காணொளியை கெஜ்ரிவாலுடன் இணைந்துப் பார்த்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை விடுவிக்க மத்திய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்

அதனைத்தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலினிடம், மாணவர்கள் பல்வேறு செயல்திட்டங்களை விளக்கினர். மேலும், டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறித்தும், பள்ளிகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

EZHILARASAN D

ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்ட அமைச்சர் மனோதங்கராஜ்!

Web Editor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க விருப்பம் -ஜி.பி.முத்து

Yuthi