‘ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழுவை முடக்கியது ஏன்’ – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் எனில், குலசேகரன் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்திலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை…

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் எனில், குலசேகரன் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்திலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்றத்தில் 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழக்கில், தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

கடந்த 1958-ஆம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையத்தின் மூலம் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைதான் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழுவை திமுக அரசு முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அண்மைச் செய்தி: ‘டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’

மேலும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க குலசேகரன் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகன் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.