முக்கியச் செய்திகள் தமிழகம்

மேடவாக்கம் மேம்பாலம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

வேளச்சேரி – தாம்பரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலைகளை விரைவில் அமைத்து தந்தால், விபத்துகளை தடுக்க முடியும் என பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து சென்னை வேளச்சேரி பகுதிக்கு இடையே மேடவாக்கம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்து வைத்தார். கடந்த சில வருடங்களாக வாகனங்களின் எண்ணிக்கை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருவதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி வரக்கூடிய பிரதான சாலையான மேடவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது நிறைவுற்று இருக்கிறது. இந்த வேளச்சேரி – தாம்பரம் இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 2.03 கிலோ மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டு கான்கிரீட் சாலைகளால் அமைக்கபட்டுள்ளது.

கடந்த வருடம் தேர்தல் போது 1 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தாம்பரம் – வேளச்சேரி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த பகுதியில் தினம் தினம் சென்று வரக்கூடிய மக்களுக்காக, 1.30 லட்சம் பேர் பயனடையும் வகையில் புதிய மேம்பாலமாக கட்டபட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘எட்டு வழி சாலையால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது, தனது நிலைப்பாடு – இபிஎஸ்’

சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ள பாலம் 95.3 கோடி ரூபாய் செலவில், சோ இணைப்பு சாலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேம்பால பணிகள் நிறைவுற்று இன்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக சாலையின் இடது புரம் சர்வீஸ் சாலைகள் மற்றும் புறவழி சாலைகள் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அதிக நீளம் கொண்ட பாலமாக இது காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மேம்பாலத்தில் பயணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, தொழிலாளர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் பயணிக்க துவங்கியுள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

Jeba Arul Robinson

சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

ஐபிஎல்: விராத் டீமில் இணைந்த இலங்கை ஆல் ரவுண்டர்

Gayathri Venkatesan